Category Archives: நீயே முதலெழுத்து..

42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்!!

மிருகங்கள் மிருகங்களாக வாழும் ஊரது மனிதர்கள் மிருகங்களாகவும் மாறிய நாடது மிருகங்கள் மனிதர்களோடு பழகப்பட மனிதருக்கும் மிருகத்திற்கும் நடுவே சில மனிதர்களும் மிருகங்களுமாய் – நானும்; அவளும்; நவீன ஆடைகொண்டு மறைத்தும் மறைக்காமல் அவளும் உடம்பு மூடியதை கிழிக்கும் பார்வையுடுத்தி நானும் சிரிப்பை அணிந்த உடம்பாய் அவளும் காதலின் இலக்கணத்திற்கு எதிரே நடக்கிறோம்; அவளுக்கு நான் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 மறுமொழிகள்

41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்!

அது ஒரு கொடிய நாள் அன்று தான் முதன் முதலில் ஒருவரின் மரணம் பற்றி கேள்வியுற்றேன் அவர் இறந்துவிட்டார் என்றார்கள் இறப்பதென்றால் என்ன என்றேன் இறப்பதெனில் – இல்லாதுபோவதென்றார்கள் இல்லாதுயெனில் இங்கிருந்து இல்லாமல் போவதா அல்லது எங்குமே இல்லாதுப் போதலா? என்றேன் அறிவிருக்கா உனக்கு? தத்துவம் பேசுமிடமா-யிது? அவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 மறுமொழிகள்

39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்..

அது ஒரு சொட்டு சொட்டான மரணம் வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டுவதும் மகிழுந்து வாங்குவதும் அப்படித்தான் – அது ஒரு சொட்டு சொட்டான மரணம்; அதிலும் போறாத காலம் வாங்கிய வண்டி பழுதுபட்டு வீழுமெனில் பணம் கட்டி மீட்பதைக் காட்டிலும் உயிர் விட்டொழிதல் கூடுதல் சுலபம்; வேறென்ன – வாழ்க்கையில் முதல் முதாலாய் வாங்கிய … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 மறுமொழிகள்

38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..

1 இன்று நாளை என வாங்க செருப்பில்லாமலே தேய்ந்த கால்கள் சில்லறையில் வாங்கிய ஊறுகாய் தவிர்த்து குழம்பு காணாத சோறு வளையிடாமலேயே வணக்கமிட்ட கைகள் தைத்த ஆடை உடுத்தாமலேயே சுருங்கிய தோல் பொட்டலம் பிரிக்கையில் மட்டுமேப் படித்த படிப்பு பாதுகை கைகடிகாரம் அலைபேசி வானொலி மிதிவண்டி ருசியான உணவு என – இன்னபிற எல்லாமே கனவாகவே … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | 3 மறுமொழிகள்

33) கவிதையில்லாத பொழுது..

ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 மறுமொழிகள்