Category Archives: வீட்டுப் பாடம்

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading

Posted in வீட்டுப் பாடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 மறுமொழிகள்

44 அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!

திறக்காத கதவின் மனத் தோன்றல்களாகவே சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும் லட்சியங்களும் நம்பிக்கையும்.. வீழும் மனிதர்களின் ஏழ்மை குறித்தோ அவர்களின் பசி பற்றியோ பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே வீழ்த்துகிறது – நம் சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை; தெருவில் கிடப்பவர் யாரென்றாலும் விடுத்து அவர் மனிதர் என்பதை மட்டுமேனும் கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல் … Continue reading

Posted in வீட்டுப் பாடம் | Tagged , , , , , , , , , , , , , , , | 2 மறுமொழிகள்

43 கடலுக்கு அப்பால் பூக்கும்; அந்த வெள்ளைமலர்கள்!!

கண்ணிரண்டை விற்றுவிட்டு கண்ணாடியை வாங்குறோம், விளக்கை அணைத்துவிட்டு வெளிச்சத்தை தேடுறோம்; நாலும் தெரிந்தவர்கள் தனியாளா நிக்கிறோம், சொந்தபந்தம் இல்லாம செத்த பிணமா அலையுறோம்; நல்ல நாலு ஏதுமில்லை நிகழ்ச்சின்னு ஒண்ணுமில்லை கல்யாண  நாளைக் கூட தொலைபேசியில் தீர்க்கிறோம்; இயக்கிவிட்ட எந்திரமா இரவு பகல் உழைக்கையில வியர்வையில் சரித்திரத்தை காய காய எழுதுறோம்; காற்று போல மண்ணு … Continue reading

Posted in வீட்டுப் பாடம் | Tagged , , , , , , , , , , | 11 மறுமொழிகள்

42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

ஒரு பேசிடாத இரவின் மௌனத்தில் அடங்கா உணர்வின் நெருப்பிற்கு மேலமர்ந்து எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!! மூடி  இறுகும் கண்களின் இமை விலக்கி கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் கரையும் உயிரின் சொட்டொன்றில் விற்காத புத்தக அடுக்கின் பயத்தை மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்; பல்துலக்குகையில் பலர் தினமும் கேட்கும் செய்தியாக இல்லாவிட்டாலும் … Continue reading

Posted in வீட்டுப் பாடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 9 மறுமொழிகள்

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading

Posted in வீட்டுப் பாடம் | Tagged , , , , , , , , , , , , , , , | 5 மறுமொழிகள்