குறிச்சொல் தொகுப்புகள்: vidhyasagar

45, கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!

கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்! நாங்கள் பிடித்த மண்வெட்டியும் மண்கூடையும் சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை, சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன; சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த அப்பாவின் சாராயமும் – அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது; பசித்த வயிறும் செருப்பிடா கால்களும் சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 மறுமொழிகள்

11, உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்!

முகமெல்லாம் கரி பூசி; பூசிய கரிக்கு உணர்வு கூட்டி; உணர்வின் உச்சத்தை படச்சுருளில் தோய்த்து என் முன்னோர் வாழ்ந்த கதையொன்றை திரைப்படமாக்கி, அதன் நெளிவுசுளிவு பிசகாமல் காட்ட எடுத்த பாராட்டத்தக்க திரையுலக பிரயத்தனம் இந்த ‘அரவான்’. உண்மையில் ஒரு பிறவி முடிந்து இருநூறு வருடங்களுக்கு பின்னே போய் உடல்கட்டை விழ மீண்டும் திரையரங்கம் விட்டு வெளியே … Continue reading

Posted in திரை விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 மறுமொழிகள்

43, விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

வீட்டுச் சுவரை இடித்துவிட்டு கதவுகளை மூடிக் கொள்பவர்கள், தெருவில் விளக்கிட்டுவிட்டு வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்; வாசலில் கோலம்போட்டு உள்ளே கோழி வெட்டும் வீரர்கள், பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்; பட்டுப் புடவைக் கட்டி அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள், பட்டுப்பூச்சி வாழ்க்கையதை விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்; நெற்றிப்பொட்டில் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 மறுமொழிகள்

41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்!

அது ஒரு கொடிய நாள் அன்று தான் முதன் முதலில் ஒருவரின் மரணம் பற்றி கேள்வியுற்றேன் அவர் இறந்துவிட்டார் என்றார்கள் இறப்பதென்றால் என்ன என்றேன் இறப்பதெனில் – இல்லாதுபோவதென்றார்கள் இல்லாதுயெனில் இங்கிருந்து இல்லாமல் போவதா அல்லது எங்குமே இல்லாதுப் போதலா? என்றேன் அறிவிருக்கா உனக்கு? தத்துவம் பேசுமிடமா-யிது? அவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 மறுமொழிகள்

40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்!

மண்ணிற்கு சண்டையிட்ட வாள்களின் ரத்தம் இன்னும்  காய்ந்திடாத மனத்திரையில் விரிகிற காட்சிகளில் மரணமின்னும் நிகழ்கிறது மரணத்தின் பெயர்தான் கொலையில்லை; சொற்களின் வசியத்தில் அசைகின்ற தலைகளில் சரிதவறு சிந்திக்கப்படாத அங்கீகரிப்பில் நடக்கின்றன கொலைகள் – உயிர்போதலுக்குப் பெயர் மரணம் மட்டுமே; மண்ணுக்கும் பெண்ணுக்கும் வீங்கிய இதயம் தனக்கென்று துடித்து துடித்தே சுடுகாடுமுட்டும் அழுது புலம்புதலில் அடுத்தவன் ரத்தமோ … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மறுமொழியவும்